Tamil

All posts in tamil are to be displayed here.

தமிழ் இலக்கியமும் மலாய் மேலாண்மைக் கோட்பாடும்

அண்மையகாலமாக மிக நேர்த்தியான முறையில் அம்னோ அரசாங்கத்தினால் நடத்தப்பெறும் ஒரு புழுத்துப்போன நாடகத்தை, மலேசிய இந்திய சமூகம் அலுத்துப்போய் எதிர்கொண்டு பேச்சுவார்த்தை, கண்டனக் கூட்டம், ஊடக அறிக்கை, கையெழுத்து வேட்டை என பலவகையில் தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தி வருவதை அனைவரும் அறிவர்.

ஓரங்கட்டப்படும் மலேசிய இந்தியர்கள் - பாகம் 1

இந்தத் தொடரின் வழியாக மலேசிய இந்தியர்கள் எப்படியெல்லாம் ஓரங்கட்டப்படுகின்றனர் என்பதனை படம் பிடித்துக் காட்ட விரும்புவதோடு, எப்படியெல்லாம் அது நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பனவற்றை அடுக்கடுக்கான விளக்கங்களோடு விவரிக்கவுள்ளேன்.

புவா பாலா நிலமோசடி - சில கேள்விகள்

மாநில முதல்வர் லிம் குவான் எங் அவர்களே,
எங்கள் கேள்விகளுக்குப் பதில் கூறுங்கள்.

பினாங்கு மாநில அதிகாரிகள் கூட்டுறவுக் கழகத்திற்கு உங்கள் அரசு செய்த எங்கள் கிராம நில விற்பனை.

தேர்தல் தேதி : 8 மார்ச் 2008

கிராம செயற்குழு உங்களைச் சந்தித்த தேதி : 13 மார்ச் 2008

புவா பாலா நிலமோசடி அம்பலம்! ஆதாரங்கள் சிக்கின!

நேற்று மதியம் மூன்று மணியளவில் இண்ட்ராஃப், ஜெரிட், சுவாராம் போன்ற மனித உரிமை இயக்கங்களோடு இணைந்து புவா பாலா கிராம மக்கள், பினாங்கு மாநில முதல்வர் லிம் குவான் எங்கை சந்தித்து மனு ஒன்றினைச் சமர்ப்பிக்க சென்றனர்.

புவா பாலாவில் மற்றுமொரு விசேசமுங்கோ..

எதிர்வரும் (02-08-2009) ஞாயிற்றுக்கிழமை, புவா பாலா கிராமத்தில் பண்பாட்டு, கலாச்சார விழா நடைப்பெறவுள்ளது. தமிழர்களின் பாரம்பரிய நடனங்களான கரகாட்டம், கோலாட்டம் மற்றும் விளையாட்டுகளான உறியடித்தல், வழுக்கு மரம் ஏறுதல், ஜல்லிக்கட்டு போன்ற நிகழ்வுகள் காலை 10 மணி தொடங்கி இரவு 8 மணிவரை நடைப்பெறவிருக்கின்றது.

வெட்டு ஒன்னு துண்டு ரெண்டு! - உதயகுமார்

கடந்த 17-ஆம் திகதி மே மாதமன்று, பத்துமலை வளாகத்தில் திரு.உதயகுமார் தனது ஆதரவாளர்களுடன் முடிகணிக்கை செலுத்தினார். இந்நிகழ்வில் சுமார் 3,000 இண்ட்ராஃப் ஆதரவாளர்கள் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தனர். காலை 6 மணி தொடங்கி பத்துமலையில் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர்.

உதயாவின் விடுதலை!

நேற்று கமுந்திங்கிலிருந்து சிரம்பான்வரை மகிழ்வுந்து பேரணியில் கலந்துகொண்ட அனுபவம் மறக்க முடியாத ஒன்று. மலேசிய வரலாற்றில் நிபந்தனையோடு கூடிய விடுதலைப் பத்திரத்தில் கையெழுத்து இட மறுத்து, வெளியேற மறுத்த ஒரே மனிதன் அண்ணன் உதயா. இறுதியில் அடிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்டிருக்கிறார்.

சிரம்பானுக்கு செல்லக் கூடாது!
ஊடக அறிக்கை கூடாது!
பொதுவிடத்தில் உரை நிகழ்த்தக் கூடாது!

இண்ட்ராஃப் குரல் - மனோகரன் பதவி விலகக்கூடாது.


அண்மைய காலமாக இ.சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.

இசாவின் கீழ் எனது 500 நாட்கள்

பி உதயகுமார் ஏப்ரல் 26

* எனது சுதந்திரத்துக்காக வாடுகிறேன்
* ஆனால் வருந்தவில்லை

இன்று ஏப்ரல் 26, 2009ஆம் ஆண்டு. இந்த நாள், ஒரு நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படாமல், விசாரணை செய்யப்படாமல், குற்றவாளி என தீர்ப்பளிக்கப்படாமல் அம்னோவின் தடுப்புக் காவலில் நான் வைக்கப்பட்டு 500 வது நாளை, குறிப்பிடுகிறது. இது, கடந்த 18 ஆண்டுகளாக மனித உரிமைகள் வழக்குரைஞராகப் பணியாற்றி வந்த, சிறுபான்மை இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ‘எனக்குக் கிடைத்துள்ள நீதி’ என்று நான் கருதுகிறேன்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் தொடர்ச்சியான, தன்மூப்பான ஆணையின்படி, ஈராண்டுகளுக்கு நான் சிறைவாசம் புரிந்து, அவரது ஆட்சியின் கீழ், காலவரம்பின்றி சிறையில் இருக்கவேண்டும் போலும். தைப்பிங்கில் உள்ள இந்த கெம்தா கமுந்திங்கில், இசா தண்டனையின் கீழ், எட்டாண்டு காலமாக சிறைவாசம் புரியும் கைதிகளும் உள்ளனர்.

திரு.செயதாசிற்காக சிறுநீரக மருத்துவ நிதி கலை நிகழ்ச்சி

நாடறிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி போராட்டவாதியான திரு.செயதாசு சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டுவருவது அனைவரும் அறிந்த ஒன்றே. தற்சமயம் வாரத்திற்கு மூன்று முறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்தும் வருகிறார்.

அண்ணன் வேதமூர்த்தி

அண்ணா..

எங்களின் வலியை சுமந்து..
எங்களின் விதியை நினைந்து..
எங்களின் கதியை உணர்ந்து..

உன்
இதயம் வலிக்கிறது..
எங்களின்
இதயம் கணக்கிறது..!

அண்ணா..
நாதியற்ற
சமுதாயத்திற்காய்
குரல் கொடுத்தாய்..

இன்று
நாதியற்று..
அயல்நாட்டில் கிடக்கிறாய்..

நன்றி இருக்கும்
ஒவ்வொரு
தமிழனுக்கும் தெரியும்..

நீ..

இண்ட்ராஃப் ஆதரவாளர்களின்மீது வன்முறை!

வழக்கறிஞர் உதயகுமாருக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாதது குறித்து அதிருப்தியடைந்த இண்ட்ராஃப் ஆதரவாளார்கள், நேற்று (சனிக்கிழமை 28/02/2009) காலை 10 மணியளவில் பிரிக்பீல்ட்ஸ் காவல் நிலையத்தில் தனிப்பட்ட முறையில் புகார் அளிக்கச் சென்றபொழுது, காவல்த்துறையினர் மிகவும் கடுமையாக நடந்துகொண்டது மட்டுமல்லாமல், வன்முறையைக் கட்டவிழ்க்கும் வகையில் அமில நீரைப் பீய்ச்சியடித்த

மலேசியர்களுக்கு உதயாவின் மடல்!

அண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்...
Syndicate content